Enable Javscript for better performance
பெண்ணிடம் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருவள்ளூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 4 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர் வி.எம்.நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார் மனைவி ராஜம் (58). இவர், வியாழக்கிழமை பிற்பகலில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்துக்கு எதிரே உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள், ராஜம் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai