சுடச்சுட

    

    மது பாட்டில்களை அகற்றும் பணியில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள்

    By திருவள்ளூர்,  |   Published on : 19th September 2014 12:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளியில் "குடி'மகன்கள் விட்டுச்செல்லும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை மாணவர்களே சுத்தம் செய்யும் அவலநிலை நிலவி வருகிறது.

    திருவள்ளூரை அடுத்த புங்கத்தூரில் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில், இரவு நேரங்களில் அந்தப் பள்ளி வளாகத்தில் சமூக விரோதிகள் சிலர் நுழைந்து தினமும் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்கள், டம்ளர்கள், மீதமுள்ள உணவுப்பொருள்கள் ஆகியவற்றை விட்டுச் செல்கின்றனர்.

    இதனால், மாணவர்கள் தினமும் காலையில் வந்தவுடன் அந்த இடத்தில் உள்ள காலி பாட்டில்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகள் ஆகியவற்றை மாணவர்களே சுத்தம் செய்யும் அவல நிலை உள்ளது.

    இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கடவில்லை என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

    எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து, பள்ளியைச் சுற்றி உயரமாக மதில் சுவர் அமைக்கவும், இரவு நேரங்களில் வளாகம் முழுவதும் வெளிச்சம் கிடைக்கும் வகையிலும் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கவும், இரவுக் காவலர்களை பணியில் அமர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், இரவு நேரங்களில் தினசரி போலீஸார் ரோந்துப் பணியை மேற்கொண்டு, பள்ளி வளாகத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai