Enable Javscript for better performance
மீஞ்சூரில் அதிமுக பிரமுகர் அடித்து கொலை: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மீஞ்சூரில் அதிமுக பிரமுகர் அடித்து கொலை: 3 பேர் கைது

    By பொன்னேரி,  |   Published on : 19th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீஞ்சூரில் அதிமுக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    மீஞ்சூர் அண்ணா தெருவில் வசித்து வந்தவர் தேவதாஸ்(65). அதிமுக பிரமுகர் இவரது மகன் ஜார்ஜ் (30).

    இவர்களின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் குட்டி. தேவதாஸ் குடும்பத்துக்கும், குட்டி குடும்பத்துக்கும் இடையே நிலத் தகராறு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை, தேவதாஸ் குடும்பத்தினருக்கும், குட்டி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், குட்டி குடும்பத்தினர் சேர்ந்து தேவதாஸ், அவரது மகன் ஜார்ஜ் ஆகியோரைக் கடுமையாக தாக்கினராம்.

    இதில் பலத்த காயமடைந்த அவர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனின்றி தேவதாஸ் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திவாரி (27), சரண்ராஜ் (22), வினோத் (23) ஆகியோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai