Enable Javscript for better performance
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

    By திருவள்ளூர்,  |   Published on : 19th September 2014 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த சேலை கண்டிகையைச் சேர்ந்தவர் தனசேகர் (45). பிளம்பர். இவர் வியாழக்கிழமை காலை, தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார்.

    பின்னர், பிற்பகலில் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை, ரூ.13 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீஸார் அங்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai