சுடச்சுட

    

    ஆந்திரத்துக்கு கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 20th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரயில்களில் கடத்த இருந்த 4 டன் ரேஷன் அரிசி வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

    சென்னை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்குப் பெற்று அதை ஆந்திரத்துக்கு கடத்தி அதிக விலைக்கு விற்பது கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்ட வழங்கல் துறையினர், வருவாய்த் துறையினர், உணவுப் பொருள் கட்டுப்பாட்டுத் துறையினர், போலீஸார் சோதனைகள் நடத்தி ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

    ஆனாலும், மின் ரயில்கள் மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதைத் தடுப்பது பெரிய சவாலாக இருந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயராமன் கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் ரயில்களில் தொடர் சோதனை நடத்த உத்தரவிட்டு இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் கடந்த வாரம் 2 டன் ரேஷன் அரிசி ரயில்களில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்ட வழங்கல் துறையின் பறக்கும் படை தனி ஆய்வாளர் கே.நித்தியானந்தம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வியாழக்கிழமை பகல் முதல் வெள்ளிக்கிழமை காலை வரை கவரப்பேட்டையில் ரயில்களில் ஏறி ஆரம்பாக்கம் வரை நடத்திய தொடர் சோதனையில் பயணிகளின் இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்ட சிறுசிறு மூட்டைகள், பைகள், அட்டைப் பெட்டிகளில் பதுக்கப்பட்டு கேட்பாரற்றுக் கிடந்த 50 பைகளை கைப்பற்றினர்.

    ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடுர் பகுதிகளுக்குச் செல்லும் மின் ரயில்கள், பயணிகள் ரயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட இந்த ரேஷன் அரிசியின் மதிப்பு 4 டன் ஆகும்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கும்மிடிப்பூண்டியை அடுத்த பஞ்செட்டி பகுதியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் ஆந்திரம் செல்லும் மின் ரயில்களில் தொடர்ந்து இனி சோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai