Enable Javscript for better performance
இளைஞரை தற்கொலைக்கு தூண்டிய தலைமைக் காவலருக்கு ஆயுள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    இளைஞரை தற்கொலைக்கு தூண்டிய தலைமைக் காவலருக்கு ஆயுள் சிறை

    By திருவள்ளூர்  |   Published on : 20th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் அருகே இளைஞரைத் தற்கொலைக்குத் தூண்டிய தலைமைக் காவலருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

    திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட மணலி புதுநகரில் முரளி என்பவருக்குச் சொந்தமான வீட்டின் மாடியில் ராமு (37), அவரது மனைவி புவனேஸ்வரி (32) ஆகியோர் வசித்து வந்தனர்.

    புவனேஸ்வரிக்கும், மணலி புதுநகரில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த தனசேகரன் (31) என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.

    இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி, இதுதொடர்பாக தம்பதியினருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ராமு, தனது மனைவி புவனேஸ்வரியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார். பின்னர், அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து, வீட்டின் உரிமையாளர் முரளி கொடுத்த புகாரின் பேரில், மனைலி புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கு தூண்டியதாக தலைமைக் காவலர் தனசேகரனைக் கைது செய்தனர்.

    இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலச்சந்திரன், ராமுவை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்துக்காக தனசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    இதையடுத்து, போலீஸார், தனசேகரனை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai