சுடச்சுட

    

    உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு

    By திருவள்ளூர்  |   Published on : 20th September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தல் வாக்குப்பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சிகளில் ஏற்பட்டுள்ள காலிப் பதவியிடங்களுக்கான தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 6 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 14 வார்டு உறுப்பினர்கள் ஆகியோருக்கு 37 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்குப்பெட்டிகள், அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, உதவித் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அந்த அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போலீஸார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    வரும் 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அந்தந்தப் பகுதி ஒன்றிய அலுவலகங்களில் நடை

    பெறுகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai