Enable Javscript for better performance
ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

    By திருவள்ளூர்,  |   Published on : 20th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளுர் மாவட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் குறைதீர் கூட்டம் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, ஓய்வுக்காலப் பயன்கள் குறித்த ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள் வரவேற்கப்படுகின்றன.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில், ஆட்சியர் தலைமையில் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    இதையொட்டி, பல்வேறு அரசு அலுவலகங்களில் தீர்வு செய்யப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதிய, ஓய்வுக்காலப் பயன்கள் குறித்த ஓய்வூதியதாரர்களின் முறையீட்டு மனுக்கள் இரண்டு நகல்களில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு செப்டம்பர் 28-ஆம் தேதி வரை வரவேற்கப்படுகின்றன.

    ஓய்வூதியதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வுபெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண், எந்த அலுவலகத்தில் கோரிக்கை நிலுவையில் உள்ளது போன்ற விவரங்களை தங்கள் மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.

    இந்த முறையீடுகளுக்கு உரிய தீர்வுக் காண நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இந்த மாவட்டத்தில் உள்ள ஓய்வூதியதாரர்கள், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai