சுடச்சுட

    

    காவல் நிலையம் அருகே வழிப்பறி:போலீஸ் விசாரணை

    By திருவள்ளூர்,  |   Published on : 20th September 2014 12:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் பஜார் வீதியில் காவல் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் அரசு அலுவலரிடம் இருந்து ரூ.20 ஆயிரம் ரொக்கம், பெண்ணிடமிருந்து 7 பவுன் நகை ஆகியவற்றைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருவள்ளூர் ராஜாஜிபுரத்தைச் சேர்ந்தவர் சேதுராமன் (52). இவர், தொழிலாளர் அலுவலகத்தில் எடை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர், வெள்ளிக்கிழமை பிற்பகல், திருவள்ளூர் டவுன் காவல் நிலையம் எதிரே உள்ள பழக்கடையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பழங்கள் வாங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது, அவரது மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்தார். பெட்டி மூடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

    அப்போது, அவ்வழியாக வந்த மர்ம நபர், அந்தப் பெட்டியை திறந்து பணப்பையை எடுத்துவிட்டு ஓடினார். இதனைக் கண்ட சேதுராமன் கூச்சலிட்டதையடுத்து, பொதுமக்கள் அந்த மர்ம நபரை விரட்டிச் சென்றனர். ஆனால், அவர் தப்பிவிட்டார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

    பெண்ணிடம் நகை பறிப்பு: திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி கமலா (48). இவர், திருவள்ளூர் காவல் நிலையம் அருகே உள்ள பஜார் வீதியில் பழக்கடை வைத்துள்ளார்.

    இவர், வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    ஈக்காடு சாலை வளைவு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், கமலா கழுத்திலிருந்த 7 பவுன் நகையை பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில், திருவள்ளூர் டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்தச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai