சுடச்சுட

    

    தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிகக் கவனம் தேவை

    By திருவள்ளூர்,  |   Published on : 20th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அபாய நோய் அறிகுறி உடைய தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரத் திட்ட இயக்குநர் எம்.எஸ்.சண்முகம் அறிவுறுத்தினார்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமையில் சுகாதாரப் பணிகள் மேம்பாட்டு திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத் திட்ட இயக்குநர் சண்முகம் பங்கேற்று, தொற்று நோய்கள், தொற்றாத நோய்கள், முதல்வரின் விரிவான மருத்துவக்காப்பீட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த அவசரக் கால தாய் மற்றும் சேய் பராமரிப்பு, மருத்துவமனை பராமரிப்பு ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறுகையில், "தாய் - சேய் நலனுக்காக அரசு தரப்பில் அதிக அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

    அபாய நோய் அறிகுறி உள்ள தாய்மார்களின் மருத்துவச் சேவையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்' என்றார்.

    மருத்துவமனை இணை இயக்குநர் மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன், மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் நாகேந்திரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai