சுடச்சுட

  

  திருந்திய நெல் சாகுபடியில் விவசாயிகள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்

  By திருவள்ளூர்,  |   Published on : 20th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடித் திட்டம் மூலம் சாகுபடி செய்து அதிக மகசூல் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அறிவுறுத்தினார்.

  திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்து பேசியது:

  திருவள்ளூர் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனைக்கூட பேருந்து, ஒவ்வொரு மாதமும் வரிசைப்படி தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்குச் சென்று மண் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது. இதற்காக, குறைந்த (நிர்ணயிக்கப்பட்டுள்ள) கட்டணம் மட்டுமே பெறப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் அதிக மகசூல் பெறும் வகையில் விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில் அதிக கவனம் செலுத்தி, அதிகப்படியான பயிர் பரப்பில் மகசூலைப் பெற வேண்டும் என்றார் அவர்.

  மேலும், வேளாண்மைத் துறையின் திட்டங்கள் குறித்த கையேடு இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுபோல், வருவாய்த்துறையின் திட்டங்கள் குறித்த கையேடும் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  கூட்டத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் பயன்கள் குறித்த துண்டுப்பிரசுரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. உழவர் அட்டையின் மூலம் கல்விக்கடன், திருமண உதவி ஆகியவற்றை விவசாயிகள் பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

  இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகும் விதைகளை மட்டுமே கடந்த 10 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதால், இதற்கு மாற்றாக நெல் ஆராய்ச்சி நிலையம் மூலம் புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

  பணப் பயிர்களான தென்னை, மா, கொய்யா போன்ற தோட்டக்கலை பயிர்களைக் குறைந்த அளவு நீரில் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயிரிடும் முறையினை தோட்டக்கலைத் துறை சார்பில் அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்க வேண்டும்.

  பாலவேடு, மிட்னமல்லி, மோரை கிராமங்களில் மழைநீரை சேகரிக்க கால்வாய் அமைத்திடவும். விவசாய நிலங்களுக்கு பாதை அமைத்து தரவேண்டும் எனவும் விவசாயிகள் கூறினர்.

  கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளுடைய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

  மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, திருவள்ளுர் துணை ஆட்சியர் ராகுல்நாத், வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரராஜன், கோட்டாட்சியர்கள் மாரிமுத்து, பாண்டியன், மேனுவல்ராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில்

  பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai