Enable Javscript for better performance
நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ - Dinamani

சுடச்சுட

    

    நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ

    By திருவள்ளூர்,  |   Published on : 20th September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை துறைமுகத்தில் இருந்து மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது.

    சென்னை துறைமுகத்தில் இருந்து திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை வழியாக மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் சரக்கு ரயிலில் 59 பெட்டிகளில் நிலக்கரி கொண்டு செல்லப்பட்டது.

    ரயிலை ஓட்டுநர் சிதம்பரம் என்பவரும், "கார்டு' பணியில் பப்லு என்பவரும் இருந்தனர்.

    பெரம்பூர் ரயில் நிலையத்தைக் கடக்கும்போது, அந்த ரயிலின் 55-வது பெட்டி, 25-வது பெட்டிகளில் இருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து, ஓட்டுநருர், சிதம்பரம் ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார்.

    இதன்பேரில், திருவள்ளூர் 1-வது நடைமேடையில் ரயில் நிறுத்தப்பட்டு அங்கு தீயை அணைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், 1 மற்றும் 2-வது நடைமேடை இருப்புப் பாதைகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒன்றரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்தச் சம்பவத்தால் திருவள்ளூர் மார்கமாக மீதமுள்ள 4 இருப்புப் பாதைகளில் இயக்கப்பட்ட ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன.

    உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai