சுடச்சுட

    

    "அம்மா' உணவகத்தை சட்டப்பேரவை உறுப்பினர் ஆய்வு

    By பூந்தமல்லி,  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூந்தமல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் "அம்மா' உணவகத்தை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் மணிமாறன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

    தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளில் ஒன்றான மலிவு விலையிலான "அம்மா' உணவகக் கட்டடம் பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே ரூ.25 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    பணிகள் முடியும் தருவாயில் திறப்பு விழாவை நோக்கி உள்ள இந்த உணவகக் கட்டடத்தை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினர் மணிமாறன் சனிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதில் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா, கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் ரவிச்சந்திரன், ஜாவித் அகமத், நகர்மன்ற உறுப்பினர்கள் தனலட்சுமி கோபிநாத், நெல்சன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai