சுடச்சுட

    

    அரசுப் பள்ளிக்கு சுற்றுச் சுவர் அமைக்கப்படுமா?

    By திருத்தணி,  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்தணி அரசு உயர்நிலைப் பள்ளி, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருவதால், அப்பள்ளிக்குச் சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருவாலங்காடு ஒன்றியம், பூனிமாங்காடு பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்கு கிழக்குப் பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மேற்கு பக்கத்துக்கு சுற்றுச்சுவர் இதுவரை அமைக்கப்படவில்லை.

    இதனால், விடுமுறை நாள்களில் இந்தப் பள்ளிக்குள் நுழையும் சிலர், மது அருந்துதல், சூதாடுதல் போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சுற்றுசுவர் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai