Enable Javscript for better performance
இயற்கையைக் காப்பது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    இயற்கையைக் காப்பது குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

    By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 21st September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, கும்மிடிப்பூண்டியில் 4 பள்ளிகளில் "இயற்கையைக் காப்போம்' என்ற உறுதிமொழியை பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஏற்றனர்.

    புதுச்சேரியில் உள்ள அன்னை தெரசா சுகாதார அறிவியல் கல்வி, பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம், "அசிஸ்ட்' உலக சாதனை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உலக ஓசோன் படலம் பாதுகாப்பு தினத்தை ஒட்டி, இந்தியா, உலக நாடுகள் பலவற்றில் 1 கோடி பேர் இயற்கையைக் காப்பது குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    இதன் ஒரு கட்டமாக கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, புதுகும்மிடிப்பூண்டி ஆதர்ஷ் வித்யாலயா, எளாவூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, சுண்ணாம்புக்குளம் விவேகானந்தா மெட்ரிக் பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் இயற்கையைக் காப்பது குறித்த உறுதிமொழியை பள்ளி மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 2500 மாணவர்கள், 70 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் எம்.அய்யப்பன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்வுக்கு, பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் நாராயணன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் எம்.ராஜலட்சுமி நன்றி கூறினார்.

    அதேபோல எளாவூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன்குமார் தலைமையில் 1500 மாணவர்களும்,

    30 ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை "அசிஸ்ட்' உலக சாதனை ஆராய்ச்சி நிறுவனம், கும்மிடிப்பூண்டி காந்தி உலக மையத்தினர்

    செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai