சுடச்சுட

    

    கத்திகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் கைது

    By பொன்னேரி  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கத்திகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை சோழவரம் போலீஸார் கைது செய்தனர்.

    சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜனப்பச்சத்திரம் முக்கியச் சாலையில் சோழவரம் போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று போலீஸார் நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றது.

    இதனையடுத்து போலீஸார் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கி சோதனை செய்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 5 கத்திகள் இருப்பது தெரிந்தது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் கத்திகளை எடுத்து வந்ததாக செங்குன்றம், மொண்டிம்மன் நகரைச் சோóந்த கிருஷ்ணன் (39), கும்மிடிப்பூண்டி அருகே உள்ள எளாவூரைச் சேர்ந்த பாபு (44) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai