சுடச்சுட

    

    திருவள்ளூர் அருகே கிப்ட் கடையில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருட்டுச் சம்பவத்தில் 5 நாளில் போலீஸார் துப்பு துலக்கி குற்றவாளியைப் பிடித்துள்ளனர்.

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் கோவிந்தராம் (35) என்பவர் "கிப்ட்' கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபரகள் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் ரொக்கம், 3 கைப்பேசிகளை எடுத்துச் சென்றனர்.

    இதுகுறித்து மணவாளநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் திருட்டில் தொடர்புடைய நபர் திருப்பதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் அங்கு சென்று அந்த நபரை கைது செய்து மணவாளநகருக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் கிருஷ்ணமூர்த்தி (24) என்பதும், இவர் ஏற்கெனவே பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் தெரிய வந்தது. மேலும், ஞாயிற்றுக்கிழமை கோவிந்தராமின் கடையில் திருடி விட்டு அந்தப் பணத்தை, தன்னுடன் வேறு ஒரு வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் அறிமுகமான பேரம்பாக்கத்தை அடுத்த கீழச்சேரியைச் சேர்ந்த குமார் (35) என்பவரிடம் ரூ. 75 ஆயிரம் பணத்தையும், 2 கைப்பேசிகளையும் கொடுத்துவிட்டு, மீதி பணத்துடன் திருப்பதிக்குச் சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கிப் பணத்தை செலவழித்து வந்தார் எனவும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸார் குமாரையும் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.70 ஆயிரம், கைப்பேசிகள், கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ரூ. 7 ஆயிரம் உள்பட ரூ.77 ஆயிரம், 3 கைப்பேசிகளைப் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும், திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai