சுடச்சுட

    

    குண்டும் குழியுமாக உள்ள செவ்வாப்பேட்டை- சித்தம்பாக்கம் சாலை

    By திருவள்ளூர்  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் இருந்து சித்தம்பாக்கம் சாலை வரையுள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

    திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டையில் இருந்து தண்டலம், கிளாம்பக்கம், கல்யாணகுப்பம், ஈக்காடு வழியாக மூலக்கரை அருகே உள்ள சித்தம்பாக்கம் வரை செல்லும் சாலை உள்ளது.

    இந்தச் சாலையை மேற்கண்ட கிராம மக்கள் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தச் சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மேலும் அண்மையில் பெய்த மழையால் அந்தச் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து அந்தச் சாலையை சீரமைக்க வேண்டும் என மேற்கண்ட கிராம மக்கள் கூறுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai