சுடச்சுட

  

  தலைக் கவசம் அணிவது குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

  By திருவள்ளூர்,  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலைக்கவசம் அணிவது குறித்து ஸ்ரீநிகேதன் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் வாகனம் ஓட்டும்போது தலைக் கவசம் அணிவது குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம் பள்ளித் தாளாளர் விஷ்ணு சரண் தலைமையில் நடைபெற்றது.

  பள்ளித் தலைமை ஆசிரியை ரோஸ்லின் வரவேற்றார்.

  சென்னை வாகன ஓட்டுநர் பயிற்சி அகாதெமியின் ஆலோசகர் ராஜகோபால் பங்கேற்று பேசியது: ஹெல்மெட் அணிவதால் முடி உதிரும் என்ற தவறான கருத்து பரவலாக உள்ளது. இந்த கருத்து முற்றிலும் தவறானது.

  இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும்போது முதலில் அவர்களது தலையில் காயம் ஏற்படுகிறது.

  அதுவே பெரும்பாலான உயிரிழப்புக்குக் காரணமாக உள்ளது.

  எனவே தலைக்கவசம் அணிவது நமக்கு மட்டுமல்லாமல் நமது குடும்பத்துக்கும் பாதுகாப்பாக உள்ளது' என்றார்.

  பள்ளித் தலைமை ஆசிரியை லட்சுமி கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai