Enable Javscript for better performance
தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    ஜி.ஆர்.டி. கல்விக் குழுமம் சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்பம் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வருகிறது ஜி.ஆர்.டி. பொறியியல், தொழில்நுட்ப கல்லூரி. இந்தக் கல்லூரி வளாகத்தில் தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் பேராசிரியர் எஸ்.ஆறுமுகம் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் சி.சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் சி.ஆர். முத்துகிருஷ்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.கலைசெல்வம் கலந்து கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகளையும், சிறப்பம்சங்களையும் மாணவர்களிடம் பேசினார்.

    இதில் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல் துறைகளைச் சார்ந்த தமிழகத்தில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    கருத்தரங்கில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் எஸ்.ஆறுமுகம், துறைத் தலைவர்கள் பி.ராஜூ, ஆர்.தமிரசன், டி.எஸ். லட்சுமி ஆகியோர் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai