Enable Javscript for better performance
நல்ல தண்ணீர் குளம் சீரமைக்கப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    திருத்தணி நகராட்சியில் நல்ல தண்ணீர் குளம் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருத்தணி காந்திநகர் பகுதியில் நல்ல தண்ணீர் குளம் உள்ளது. இந்தக் குளத்தை நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது.

    இந்தக் குளத்தில் தண்ணீர் இருந்தால் காந்தி நகர், முருக்கப்பா நகர், கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயரும்.

    இந்நிலையில், இந்த நல்லதண்ணீர் குளத்தின் கரைகள் சேதமடைந்தும், புதைந்தும் காணப்படுகின்றன. மேலும், குளத்துக்கு தண்ணீர் வரும் நீர் வரத்து கால்வாயும் புதைந்துள்ளது.

    இதுதவிர, குளத்தில் ஆகாயத்தாமரைகள் படர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுப்படுவதுடன், சுற்றியுள்ள வீடுகளிலும் குடிநீர் தன்மை பாதிக்கப்படுகிறது.

    எனவே, நகராட்சி நிர்வாகம் குளத்தில் உள்ள இலைகளை அகற்றி, சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai