சுடச்சுட

  

  பருப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து கிளீனர் காயம்

  By ஊத்துக்கோட்டை  |   Published on : 21st September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியபாளையம் அருகே பருப்பு மூட்டை ஏற்றி வந்த லாரி சனிக்கிழமை காலை சாலையின் தடுப்புச் சுவரில் மோதி, கவிழ்ந்ததில் கிளீனருக்கு காயம் ஏற்பட்டது.

  ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், தாடி பத்ரி பகுதியில் இருந்து கடலைப் பருப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு லாரி, சென்னை மாதவரத்திற்கு வந்து கொண்டு இருந்தது.

  லாரியை முகேஷ் (28) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக சாதிக் (20) இருந்தார்.

  சனிக்கிழமை அதிகாலை லாரி, ஊத்துக்கோட்டையை அடுத்த பெரியபாளையம் அருகே தண்டலம் பகுதியில் வந்துக் கொண்டு இருந்தது.

  அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் திடீரென நிலைத் தடுமாறிய லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சவரில் மோதி, விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில், கிளீனர் சாதிக்குக்கு காயம் ஏற்பட்டது.

  சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்து கிடந்ததில் அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையின் குறுக்கே கிடந்த லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை

  சீர் செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai