Enable Javscript for better performance
புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கோழிகள் வழங்கும் விழா- Dinamani

சுடச்சுட

    

    புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கோழிகள் வழங்கும் விழா

    By திருவள்ளூர்,  |   Published on : 21st September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீத்தஞ்சேரி அருகே உள்ள கச்சூர் ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் பழங்குடியினருக்கு விலையில்லா கோழிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை சார்பில் புதுவாழ்வுத் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு விலையில்லா கோழிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்டத் திட்ட மேலாளர் சிவகாமி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு புதுவாழ்வுத் திட்ட பகுதித் தலைவர் பொன் பரசுராமன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் அனந்தேரி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினர் 14 பேருக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான கோழிகளையும், கச்சூரைச் சேர்ந்த பழங்குடியினர் 11 பேருக்கு ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கோழிகளையும் திட்ட மேலாளர் சிவகாமி ஸ்ரீகிருஷ்ணா வழங்கினார்.

    கால்நடை ஆலோசகர்கள் நாகேந்திரன், கவிதா, உதவித்திட்ட மேலாளர் ரமேஷ், ஊராட்சிமன்றத் தலைவர் வஜ்ஜிரவேல், பணியாளர்கள் இசக்கியேல், மேகநாதன் உள்ளிட்டோர் இதில்

    பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai