சுடச்சுட

    

    பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை துப்புரவுப் பணியாளர்கள் முற்றுகை

    By பூந்தமல்லி,  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    துப்புரவுப் பணியாளர்கள் வேலையைப் புறக்கணித்து சனிக்கிழமை காலை பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    பூந்தமல்லி நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை 47 நிரந்தர துப்புரவுப் பணியாளர்கள், 60 ஒப்பந்த துப்புரவுப் பணியாளர்களை கொண்டு தினமும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வரும் நிரந்தரத் தொழிலாளர்கள் 30-க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை காலை வேலையைப் புறக்கணித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நகராட்சி நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துப்புரவுப் பணியாளர்கள் கூறியது: "பூந்தமல்லி நகராட்சியில் நீண்ட காலமாக துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள நாங்கள் எங்கள் வாழ்கை முன்னேற்றத்துக்கு வங்கிகளில் கடன் பெற சென்றால் வங்கி அதிகாரிகள் நகராட்சி ஆணையரிடம் இருந்து கடிதம் வாங்கி வரும்படி கேட்கின்றனர்.

    இதுகுறித்து பூந்தமல்லி நகராட்சி ஆணையரிடம் பல முறை கடிதம் வழங்கக் கூறியும் அவர் துப்புரவுப் பணியாளர்களுக்கு கடிதம் வழங்க மறுக்கிறார்.

    மற்ற நகராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு வங்கிக் கடன் பெற நகராட்சி அதிகாரிகள் கடிதம் கொடுக்கின்றனர்.

    ஆனால் இங்கு மட்டும் கடிதம் வழங்க நகராட்சி அதிகாரி மறுக்கிறார்' எனக் கூறி நுழைவு வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர்மன்றத் தலைவர் திருமலை, நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா விரைந்து வந்து வேலைப் புறக்கணிப்பில் ஈடுப்பட்ட துப்புரவுப் பணியாளர்களிடம் கடன் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai