சுடச்சுட

  

  பொன்னேரி காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் துணை இயக்குநர் ஆய்வு

  By பொன்னேரி  |   Published on : 21st September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பொன்னேரி காவல் நிலையத்தில் காஞ்சிபுரம் சரக காவல் துறை துணை இயக்குநர் சத்தியமூர்த்தி வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது காவல் நிலையத்தில் இருந்த வருகைப் பதிவேடு, வழக்குப் பதிவேடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

  பின்னர் பொதுமக்களை அலைகழிக்காமல் அவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என போலீஸாருக்கு அறிவுரை கூறினார்.

  மேலும் புகார் அளிக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஆய்வின்போது பொன்னேரி காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எட்வர்ட், பொன்னேரி ஆய்வாளர் சர்தார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai