சுடச்சுட

  

  முள்புதர் சூழ்ந்துள்ள மகளிர் பள்ளி கழிவறை

  By திருவள்ளூர்,  |   Published on : 21st September 2014 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை, முள்புதர் சூழ்ந்துள்ளதால் மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  திருவள்ளூர் வி.எம். நகரில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

  இந்தப் பள்ளியில் திருவள்ளூர், ஈக்காடு, மணவாளநகர், புட்லூர், சேலை, அம்சா நகர், பூங்காநகர், ராஜாஜிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

  இந்தப் பள்ளியில் உள்ள கட்டடங்கள் பல இடங்களில் விரிசல்விட்டும், வகுப்பறைகளின் தரையில் சிமென்ட் பூச்சுக்கள் சிதைந்தும் காணப்படுகின்றன. இதுபோல் பல வகுப்பறைகள் பராமரிக்கப்படாமல் உள்ள நிலையில், கழிவறையும் முள்புதர் சூழ்ந்துக் காணப்படுகிறது.

  இதனால், அவ்வழியே செல்லும் மாணவிகளை விஷ ஜந்துக்கள் தீண்டும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளியின் கழிவறையைச் சுற்றிலும் உள்ள புதர்களை அகற்றியும், வகுப்பறைகளில் சேதமடைந்துள்ள பகுதிகளில் சிமென்ட் காரை அமைக்கவும் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai