சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டியவை: ஆட்சியர் ஆலோசனை

    By திருவள்ளூர்  |   Published on : 21st September 2014 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பேசியது: "செப்டம்பர் 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.

    இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் விடியோ பதிவு, தடுப்புக் கம்பி வேலிகள் அமைத்திடவும் காவல்துறை பாதுகாப்புகளுடன் வாக்கு எண்ணிக்கையை சுமுகமான முறையில் நடத்த மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்கினார்.

    மேலும் குறித்த நேரத்தில் அனைவரும் தங்களது பணியை சீரிய முறையில் செய்ய வேண்டும்.

    பணியின்போது எவ்வித தொய்வும் ஏற்படக் கூடாது என அதிகாரிகளை வலியுறுத்தினார்.

    இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நக்கீரன், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai