சுடச்சுட

  

  திருவள்ளூர் அருகே உள்ள தண்டலம் கிராமத்தில் அங்கன்வாடிக் கட்டடம் அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  திருவள்ளூரை அடுத்த வீரராகவபுரம் ஊராட்சியில் உள்ள தண்டலம் கிராமத்தில் 25 குழந்தைகள் அங்கன்வாடிக்குச் செல்கின்றனர்.

  இந்நிலையில், தண்டலம் கிராமத்தில் அங்கன்வாடிக்கு என தனி கட்டடம் இல்லை. இதனால், அந்தப் பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுக் கட்டடத்தில் அங்கன்வாடிக் கட்டடம் இயங்கி வருகிறது.

  மேலும், அந்த மாணவர்களுக்கு சமையலும் குறுகலான இடத்தில் செய்யப்படுகிறது. எனவே, தண்டலம் கிராமத்தில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai