சுடச்சுட

  

  கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தம்: வறண்டது கிருஷ்ணா கால்வாய்

  By திருவள்ளூர்,  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கிருஷ்ணா கால்வாய் முற்றிலுமாக வறண்டது.

  சென்னைக் குடிநீரின் முக்கிய ஆதாரமான ஏரிகளின் ஒன்றான பூண்டி ஏரி, கடந்த ஆண்டு முதல் வறண்டதால் சென்னைக் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

  இதையொட்டி, தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் அவ்வப்போது திறந்துவிடப்பட்டது.

  ஆனால், பூண்டி ஏரி நிரம்புவதற்குள்ளாக, பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, தண்ணீர் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், கடந்த திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

  இதையொட்டி, படிப்படியாக கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் வரத்து குறைந்து சனிக்கிழமை கால்வாய் முற்றிலுமாக வறண்டது. ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட 1.57 டி.எம்.சி. தண்ணீர் இதுவரை பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.

  மொத்தமுள்ள 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 568 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. மேலும், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 252 கன அடி தண்ணீர் திறந்துவிடப்

  பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai