சுடச்சுட

    

    காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு

    By திருவள்ளூர்  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரத்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத் தலைவராக இருந்த ஏ.ஜி.சிதம்பரமே நீட்டிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், மாவட்டச் செயலாளர்கள் 15 பேர், மாவட்ட பொதுச்செயலாளர்கள் 15 பேர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 15 பேர் உள்பட ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரத்தை அவரது திருவள்ளூரில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    மாவட்ட பொருளாளர் நாகராஜன், நிர்வாகிகள் மதன், வடிவேலு, மோகன்தாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai