சுடச்சுட

  

  கூலி குறைப்பு விவகாரம்: கஞ்சித் தொட்டி திறக்க நெசவாளர்கள் முடிவு

  By திருத்தணி,  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் கூலி குறைக்கப்பட்டதைக் கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விசைத்தறி நெசவாளர்கள், திங்கள்கிழமை கஞ்சித்தொட்டி திறக்க முடிவு செய்துள்ளனர்.

  திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, சொரக்காய்பேட்டை, வங்கனூர், ஸ்ரீகாளிகாபுரம், ஆர்கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

  இந்தத் தொழிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  இதனிடையே, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாவு ஒட்டுனர், விசைத்தறி நெசவாளர்கள், நூல் இழைப்பாளர்களுக்கு திடீரென கூலி குறைக்கப்பட்டது.

  இதனைக் கண்டித்து அத்திமாஞ்சேரிபேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை பகுதிகளில் உள்ள விசைத்தறி நெசவாளர்கள் கடந்த சில தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இந்நிலையில், ஸ்ரீகாளிகாபுரம் திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை திரண்டனர்.

  அப்போது, அந்தப் பகுதியில் கஞ்சித்தொட்டி திறக்கவும், வரும் 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும் விசைத்தறி நெசவாளர்கள் முடிவு செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai