சுடச்சுட

    

    புதிய சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு:லாரி ஓட்டுநர்கள் விரைவில் போராட்டம்

    By செங்குன்றம்,  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரி ஓட்டுநர்களுக்கான புதிய சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து விரைவில் போராட்டம் நடத்தப்படும் என, தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் தெரிவித்தார்.

    செங்குன்றத்தை அடுத்த கொளத்தூர், ரெட்டேரியில் சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் பதவி ஏற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் துரைலிங்கம் தலைமை வகித்தார்.

    சென்னை லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவராக என்.சுப்பிரமணி, செயலாளராக பி.கண்ணன், பொருளராக கே.அருள் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் பங்கேற்று பேசியது:

    தமிழ்நாட்டில் லாரி ஓட்டுநர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6 லாரி ஓட்டுநர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.லாரிகள் காணாமல் போவதும் தொடர்கதையாகி வருகிறது.

    இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில், லாரி ஓட்டுநர்களுக்கான புதிய சட்டத்தை வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் மத்திய அரசு அமலுக்கு கொண்டுவரவுள்ளது.

    அந்தச் சட்டத்தில் லாரி ஓட்டுநர்களுக்கு பாதகமான அம்சங்கள் இருக்கின்றன.

    எனவே, இந்த புதிய சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்துவது தொடர்பாக வரும் 26-ஆம் தேதி தில்லியில் நடைபெறும் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும்.

    இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார் அவர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai