சுடச்சுட

  

  மின்னணு தகவல் தொடர்பு பொறியியல் குறித்த கருத்தரங்கம்

  By கும்மிடிப்பூண்டி,  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் மின்னனு தகவல் தொடர்பு பொறியியல் குறித்த 5-வது தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

  கருத்தரங்குக்கு டி.ஜெ.எஸ். கல்விக்குழுமத் தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தார். செயலாளர் டி.ஜெ.ஆறுமுகம், இயக்குனர் பழனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். இதில், "ஆர்-கியூப்' ஆலோசனை நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் குமரன் நாராயணசாமி பங்கேற்றார்.

  இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

  நிறைவு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தென்னக ரயில்வே தலைமைப் பகுதிப் பொறியாளர் பி.ஜி.ராஜசேகரன் பங்கேற்று, வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

  துறைத்தலைவர் எஸ்.ஜெயஅனுசுயா நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai