சுடச்சுட

  

  லாரி ஓட்டுநரை போலீஸார் தாக்கியதைக் கண்டித்து ஓட்டுநர்கள் போராட்டம்

  By திருவள்ளூர்,  |   Published on : 22nd September 2014 12:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  லாரி ஓட்டுநரை மாமூல் கேட்டுத் தாக்கிய போலீஸாரைக் கண்டித்து, 10-க்கும் மேற்பட்ட லாரி ஓட்டுநர்கள் சனிக்கிழமை இரவு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

  திருவள்ளூர், தோல்கேட், தேரடி, காமராஜர் சிலை, ஆவடி சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் போலீஸார் நின்று வாகனச் சோதனை நடத்துவது வழக்கம்.

  அதே போல், சனிக்கிழமை இரவு, திருவள்ளூர் டவுன் சிறப்பு உதவிக் காவல் ஆய்வாளர் நரசிம்மன், இளைஞர் காவல் படையைச் சேர்ந்த இளைஞர் ஆகியோர் தேரடிப் பகுதியில் பணியில் இருந்தனர். அப்போது, பெரியபாளையத்தில் இருந்து கற்களை ஏற்றிக்கொண்டு, திருவள்ளூர் வழியாக கேரள மாநிலம் கள்ளிக்கோடு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.

  அந்த லாரியை ஈரோட்டைச் சேர்ந்த மாதேஸ்வரன் (47) ஓட்டிச் சென்றார். தேரடி அருகே வந்தபோது, எஸ்.எஸ்.ஐ. நரசிம்மன் லாரியை நிறுத்தி விசாரித்துள்ளார்.

  அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ஓட்டுநர் மாதேஸ்வரனை எஸ்.எஸ்.ஐ. நரசிம்மன் தாக்கினாராம். இதனைக் கண்ட மற்ற லாரி ஓட்டுநர்கள், தங்களது லாரிகளை அப்படியே நிறுத்திவிட்டு போலீஸாரைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதனைத்தொடர்ந்து, எஸ்.எஸ்.ஐ. நரசிம்மன், உடனடியாக அந்த லாரியின் பதிவு எண்ணையும், ஓட்டுநர் பெயரையும் குறித்துக் கொண்டு, வழக்குப் பதிவு செய்யும் புத்தகத்தில் அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக வழக்குப் பதிவு செய்தார்.

  தகவலறிந்த திருவள்ளூர் டவுன் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் உள்ளிட்ட போலீஸார் அங்குச் சென்று, ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்துச் சென்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai