Enable Javscript for better performance
வாக்கு எண்ணிக்கை :பலத்த போலீஸ் பாதுகாப்பு- Dinamani

சுடச்சுட

    

    வாக்கு எண்ணிக்கை :பலத்த போலீஸ் பாதுகாப்பு

    By திருவள்ளூர்,  |   Published on : 22nd September 2014 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை (செப்.22) முதல் எண்ணப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி காலிப் பதவியிடங்களுக்கான தேர்தல் செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 6 ஊராட்சிமன்றத் தலைவர்கள், 14 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் முடிவடைந்தப் பின்னர், வாக்குகள் பதிவான பெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்தப் பகுதி ஒன்றிய அலுவலகங்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டன.

    அந்த அறைகளுக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உள்ளாட்சி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அந்தந்தப் பகுதி உதவித் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்தப் பகுதி ஒன்றிய அலுவலகங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai