சுடச்சுட

    

    அனுப்பம்பட்டு ஊராட்சித் தலைவராக உமாமகேஸ்வரன் வெற்றி

    By பொன்னேரி  |   Published on : 23rd September 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சார்லஸ் (எ) உமாமகேஸ்வரன்  223 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அனுப்பம்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் உமாமகேஸ்வரன், சங்கர்ராஜா ஆகியோர் போட்டியிட்டனர்.

    வாக்கு எண்ணிக்கை, மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொன்னேரி கோட்டாட்சியர் மேனுவல்ராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இதில் உமா மகேஸ்வரன் 1345 வாக்குகளும், சங்கர் ராஜா 1122 வாக்குகளும் பெற்றனர். இதில் 223 வாக்குகள் கூடுதலாக பெற்ற உமாமகேஸ்வரன் வெற்றி பெற்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai