சுடச்சுட

  

  திருவள்ளூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை அமைதியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடினர்.

  திருவள்ளூர் மாவட்டத்தில், 6 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 14 வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

  இதன் வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. இதில், கடம்பத்தூர் ஒன்றியம், நரசிங்கபுரம் ஊராட்சித் தலைவராக ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். இவர் மொத்தம் பதிவான 1,258 வாக்குகளில் 705 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

  திருவள்ளூர் ஒன்றியத்தில், கீழானூர் ஊராட்சியில் மொத்தம் பதிவான ஆயிரத்து 183 வாக்குகளில் கே.சண்முகம், 422 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.

  பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் மொத்தம் பதிவான ஆயிரத்து 333 வாக்குகளில் ஜெயராஜ் 801 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

  ஆர்.கே. பேட்டை ஒன்றியத்தில், அஸ்வரேவந்தாபுரம் ஊராட்சியில் மொத்தம் பதிவான 2 ஆயிரத்து 183 வாக்குகளில் வி.கோவன் என்பவர் ஆயிரத்து 304 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

  மீஞ்சூர் ஒன்றியத்தில், அனுப்பம்பட்டு ஊராட்சியில் மொத்தம் பதிவான 2 ஆயிரத்து 498 வாக்குகளில் உமாமகேஸ்வரன் என்பவர் ஆயிரத்து 345 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

  கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏ.என்.குப்பம் ஊராட்சியில் மொத்தம் பதிவான ஆயிரத்து 458 வாக்குகளில் எஸ்.மல்லிகா என்பவர் 732 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார்.

  வெற்றி பெற்ற 14 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்: மீஞ்சூர் ஒன்றியத்தில் ஏறுசிவன் ஊராட்சியில் 1-ஆவது வார்டு அமுதா சுப்பிரமணி, 2-ஆவது வார்டு மு.சேகர், 3-ஆவது வார்டில் செல்வி சங்கர், 4-ஆவது வார்டில் ஏழுமலை, 5-ஆவது வார்டில் மு.சரத்குமார், 6-ஆவது வார்டில் பா.ராமகிருஷ்ணன், மேலூர் ஊராட்சியில் வார்டு 9-இல் எஸ்.நாகஜோதி சிகாமணி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

  திருவள்ளூர் ஒன்றியத்தில் காக்களூர் 8-ஆவது வார்டில் கே.நாகராஜனும், திரூர் ஊராட்சியில் 7-ஆவது வார்டில் க.தனசேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  பூந்தமல்லி ஒன்றியம், சோரஞ்சேரி ஊராட்சியில் 5-ஆவது வார்டில் கே.கோட்டீஸ்வரனும், புழல் ஒன்றியத்தில் விளாங்காடு பாக்கம் ஊராட்சியில் 3-ஆவது வார்டில் இ.பாஸ்கர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

  வில்லிவாக்கம் ஒன்றியத்தில் வானகரம் ஊராட்சி வார்டு 6-இல் சி.வசந்தா, பாலவேடு ஊராட்சி வார்டு 4-இல் இ.கனகவள்ளி, வெள்ளானூர் ஊராட்சியில் பி.கே.ஜானகிராமன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்தப் பகுதி ஒன்றியக் குழுப் பெருந்தலைவர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் சான்றிதழ்களை வழங்கினர்.

  இதைத் தொடர்ந்து அந்தந்த ஊராட்சிகளில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai