சுடச்சுட

    

    திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3 நாள் பணியிடைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    இந்த முகாமில் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 3 நாள் பணியிடைப் பயிற்சி முகாம் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இந்த முகாமில் 9-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாசிப்பு திறன், எழுத்துத் திறன், சமூக அறிவியல் தொடர்பான அடிப்படை செயல்பாடுகள், எளிமையான முறையில் மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல், தேர்ச்சி சதவீதம் அதிகரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முகாமை எஸ்.எஸ்.ஏ. இயக்கத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் முருகேசன் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.சந்திரசேகர் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பசுபதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சின்ராஜ் வரவேற்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai