சுடச்சுட

    

    18 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிப்பில் திருமணம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்வு

    By பூந்தமல்லி,  |   Published on : 23rd September 2014 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுமக்கள் வாக்களித்து ஊராட்சி மன்றத் தலைவரைத் தேர்வு செய்தனர். இதில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ரவிக்குமார், முருகன், சரவணன், ஜெயராஜ் ஆகிய நான்கு பேர் போட்டியிட்டனர்.

    திருமணம் ஊராட்சியில் மொத்தம் உள்ள 1,550 வாக்குகளில், 1,333 வாக்குகள் பதிவாகின. வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது.

    இதில் அதிமுகவைச் சேர்ந்த ஜெயராஜ் 801 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் சரவணன் -248, முருகன் - 198, ரவிக்குமார் - 64 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர். இதில் 22 வாக்குகள் செல்லாத வாக்குகளாக பதிவாகின. இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர் ஜெயராஜிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர் சுசிலா வழங்கினார்.

    இதில் ஒன்றியக் குழுத் தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ரவீந்திரநாத், உதவித் தேர்தல் அலுவலர்கள் கிருஷ்ணன், சத்தியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    திருமணம் ஊராட்சியில் கடந்த 18 ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் பொதுமக்கள் வாக்களித்து ஊராட்சி மன்றத் தலைவரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

    இதேபோல் பூந்தமல்லி ஒன்றியம், சோராஞ்சேரி ஊராட்சிக்குள்பட்ட 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் கோட்டீஸ்வரன் 93 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட நாராயணன்-71, ஜெயவேலு-58, சேகர்-51, ரமேஷ்-26 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai