சுடச்சுட

  

  அரசு நிலத்தில் 4 குடும்பத்தினர் ஆக்கிரமித்து கட்டியுள்ள குடிசை வீடுகளை அகற்ற வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஜனகராஜகுப்பம் கிராமத்துக்கு மேற்கே குளக்கரை புறம்போக்கு நிலத்தை, 4 குடும்பத்தினர் ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டியுள்ளனர்.

  இந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கிராமத்துக்குத் தேவையான மகளிர், குழந்தைகள் பொதுக் கழிப்பிடம், ஈமச் சடங்குக் கூடம், பொது விநியோகக் கடை, அங்கன்வாடி போன்ற ஊராட்சிக் கட்டடங்கள் அமைக்கலாம்.

  இது தவிர கிராமத்துக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆகையால், 4 குடும்பத்தினர் ஆக்கிரமித்த அந்த இடத்தை மீட்டுத் தர வேண்டும் என 150 பெண்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  மேலும், வருவாய் கோட்டாட்சியர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறிவிட்டு, சென்னைத் தலைமைச் செயலகத்துக்குச் சென்றதால், ஆத்திரமடைந்த கிராமவாசிகள், கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருந்துவிட்டு வீடு திரும்பினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai