சுடச்சுட

    

    ஆவடி அருகே உள்ள தனியார் தண்ணீர் நிறுவனத்தை மூடக் கோரி 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

    ஆவடி அருகே உள்ள மோரை பங்காருபேட்டை கிராமத்தில் சுத்திகரிப்பு செய்யப்படும் தண்ணீர் தொழிற்சாலை உள்ளது.

    இந்த நிறுவனத்தின் உற்பத்தியால், சுற்று வட்டாரத்தில்

    உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிறுவனத்தை மூட கோரி கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர்.

    திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடமும், வில்லிவாக்கம் ஒன்றிய அதிகாரியிடமும் புகார் கொடுத்தனர்.

    இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுக் கூறி, 100-க்கும் மேற்பட்டோர் பூச்சிஅத்திப்பேடு பிரதான சாலையில் செவ்வாய்க்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்து அம்பத்தூர் வட்டாட்சியர் லதா, ஆவடி உதவி ஆணையர் கெங்கேஸ்வரன், வில்லிவாக்கம் ஒன்றிய ஆணையர் யுவராஜ் ஆகியோர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தண்ணீர் நிறுவனத்தின் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai