சுடச்சுட

  

  கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த கல்பேடு, தும்பாக்கம் பகுதியில் கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் சி.எச்.சேகரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11 லட்சத்தில் இரு நியாய விலைக் கடை கட்டடங்கள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன.

  கல்பேடு, தும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவர்களது பகுதியில் நியாய விலைக் கடை இல்லாதது குறித்தும் இதனால் பெரிதும் சிரமப்படுவதாகவும் கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சேகரிடம் மனு அளித்திருந்தனர்.

  இதையடுத்து எம்.எல்.ஏ. சேகர் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.ஐந்தரை லட்சம் என ரூ.11 லட்சத்தில் கல்பேடு, தும்பாக்கத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டடத்தை கட்ட ஏற்பாடு செய்திருந்தார். இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மேற்கண்ட இரு பகுதிகளிலும் நியாய விலைக் கடைத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலைக் கடைகளைத் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

  இந் நிகழ்வில் எல்லாபுரம் ஒன்றிய தேமுதிக செயலாளர் விஜயபாஸ்கர், நிர்வாகிகள் ஞானமூர்த்தி, டி.என்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai