சுடச்சுட

  

  பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராஜனிடம் தேசியப் புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) 6 நாள்கள் நடத்திய விசாரணை முடிந்ததை அடுத்து, அவர் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

  தமிழகத்தை உளவு பார்த்து, பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியதாக அருண் செல்வராஜனை சென்னை விமான நிலையத்தில் கடந்த 10-ஆம் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். தொடர்ந்து, அருண்செல்வராஜனை காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

  கடந்த 17-ஆம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அருண்செல்வராஜனை  செப்டம்பர் 18-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை மொத்தம் 6 நாள்கள் என்.ஐ.ஏ. காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். இதையடுத்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் அருண்செல்வராஜனை காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அவரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

  போலீஸார் விசாரணையின்போது தன்னை துன்புறுத்தவில்லை என்றும், தனக்கு மாற்று உடைகள் வேண்டும் என்றும், அருண்செல்வராஜன் கூறியதை அடுத்து அவருக்கு மாற்று உடைகளை ஏற்பாடு செய்து தருமாறு நீதிபதி மோனி உத்தரவிட்டார்.

  இதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் அருண்செல்வராஜனை போலீஸார் அழைத்துச்  சென்று 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai