சுடச்சுட

  

  சென்னை அம்பத்தூர் அருகே தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

  அம்பத்தூர் திருமுல்லைவாயல் அன்னை சத்தியா நகர் 8-ஆவது தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். ஓட்டுனர். இவரது மகன் பிரதீப்குமார் (17). ஆவடியிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். திங்கள்கிழமை காலை பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு தாமதமாகச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை.

  மேலும் மாணவனின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மகனை கண்டித்ததாக் கூறப்படுகிறது.

  இதனால் மனமுடைந்த பிரதீப்குமார், பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார்.

  திருமுல்லைவாயல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai