சுடச்சுட

  

  மஹாளய அமாவாசையையொட்டி, பக்தர்கள் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலுக்கு வந்ததால் திருவள்ளூர் நகரம் போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது.

  அமாவாசைதோறும் திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவர் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் பக்தர்கள் வந்து இரவு தங்கி அதிகாலை எழுந்து குளத்தில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

  இந்த செவ்வாய்க்கிழமை மஹாளய அமாவாசை என்பதால் வழக்கத்தை விட கூடுதலான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர்.

  ஏற்கெனவே கோயிலைச் சுற்றியுள்ள தெருக்கள் ஆக்கிரமிப்பு காரணமாக மிகவும் குறுகலாக உள்ளன. மேலும் கோயில் குளத்தில் பூண்டி ஏரியின் தண்ணீரை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் வாகனங்களை குளத்தின் அருகில் நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.

  இதனால் கோயிலைச் சுற்றியுள்ள குளக்கரைச் சாலை, கிழக்கு குளக்கரைச் சாலை, ராஜாஜி சாலை, மோதிலால் தெரு, பஜார் வீதி ஆகிய பகுதிகளில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai