சுடச்சுட

    

    ஊத்துக்கோட்டை, செப். 23: ஊத்துக்கோட்டையில் வழக்குரைஞர்கள் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் எதிரில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது.

    இங்கு 50-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை அவசரக் கூட்டம் நடத்தினர்.

    இந்தக் கூட்டத்துக்கு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் வேல்முருகன், பொருளாளர் ஜான் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், புதிதாகப் பணி நியமனம் செய்யப்பட உள்ள 162 சிவில் நீதிபதிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் சட்டப் படிப்பில் தேர்ச்சிப் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என்ற அம்சத்தை மாற்றி, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்குரைஞர்களாக பதிவு செய்தவர்களும் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திங்கள், செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai