சுடச்சுட

    

    அடித்தட்டு மக்கள் ஏற்றம் பெற சீரிய திட்டங்கள்

    By திருவள்ளூர்,  |   Published on : 25th September 2014 12:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு ரூ. 17.85 லட்சத்தில் இருசக்கர வாகனங்களை பால் வளத்துறை அமைச்சர் பி.வி.ரமணா வழங்கினார்.

    திருவள்ளுரை அடுத்த ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 2013-2014 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு ஒன்றியக் குழு பெருந்தலைவர் புட்லூர் ஆர்.சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ மணிமாறன் வரவேற்றார்.

    இதில் பால்வளத் துறை அமைச்சர் பி.வி.ரமணா, மாவட்ட ஆட்சியர் கொ. வீரரகாவ ராவ் ஆகியோர் கலந்து கொண்டு 32 மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்களையும், 31 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையையும் வழங்கினர். விழாவில் அமைச்சர் பி.வி.ரமணா பேசியது:

    தமிழக முதல்வர் அனைத்து அடித்தட்டு மக்களும் ஏற்றம் பெறும் வகையில் பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அதை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார்.

    அதிலும் குறிப்பாக, மாற்றுத் திறனாளிகளின் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனிச் சிறப்புத் திட்டங்களை வகுத்து செயற்கைக் கால், முடநீக்கியல் சாதனங்கள், காதொலிக் கருவிகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், மாதாந்திர உதவித் தொகை, கடன் உதவிகள், வேலைக்குச் செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள் என பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறார் என்றார் அவர்.

    இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திரன், நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai