சுடச்சுட

  

  "ஆசிரியர்களை இழிவுபடுத்தினால் தண்டிக்க தனிச் சட்டம் தேவை'

  By திருவள்ளூர்,  |   Published on : 25th September 2014 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் இந்திரா கல்விக் குழுமத்தின் கீழ் இயங்கி வரும் இந்திரா கல்வியியல் கல்லூரியில் 7-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  இதில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்று பேசியதாவது:

  பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே பிரிக்க முடியாத நல்லுறவு உள்ளது. இந்த உறவை சமுதாயம் கொச்சைப்படுத்தும் விதமாக சித்தரித்து வரும் திரைப்படங்களை தடை செய்ய வேண்டும்.

  கொரியா போன்ற நாடுகளில் ஆசிரியர்களை கொச்சைப்படுத்தினால், தண்டிக்க தனிச் சட்டம் உள்ளது. அதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டு வர வேண்டும். ஆசிரியர்களாக வர நினைக்கும் மாணவர்கள், அதிக அளவில் புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

  மாணவர்களின் திறனைக் கண்டுபிடிக்கும் தகுதி ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது. மாணவர்களிடையே பாரபட்சம் காட்டாமல் ஆசிரியர்கள் நடந்தால், மாணவர்கள் வளர்ச்சி அடைவார்கள். எனவே ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றார் அவர்.

  இதைத்தொடர்ந்து, பி.எட் முடித்த 100 மாணவர்களுக்கும், எம்.எட் முடித்த 35 மாணவர்களுக்கும் பட்டங்களை பாரதி பாஸ்கர் வழங்கினார்.

  விழாவுக்கு, இந்திரா கல்விக் குழுமத் தலைவர் வி.ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கல்லூரி நிர்வாக அறங்காவலர் இந்திரா ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் சாந்திபிரமோத் வரவேற்றார்.

  கல்லூரியின் துணை முதல்வர் ராதிகா வித்யாசாகர் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai