சுடச்சுட

    

    உடல்நலம் குறித்த விழிப்புணர்வு: ஆட்சியர் வலியுறுத்தல்

    By திருவள்ளூர்,  |   Published on : 25th September 2014 12:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், புற்றுநோய் கண்டறிதல் சிறப்பு முகாம் திருவள்ளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயன் பெற்றனர்.

    திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இம் முகாம் நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் முகாமை தொடங்கி வைத்து பேசியது:

    "தமிழக முதல்வர் கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார்.

    இதில் வருமுன் நோய்களை கண்டறிந்து உதவ ஏதுவாக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் நல்வாழ்வுக்காக ரூ.4 லட்சம் வரை அரசின் செலவிலேயே ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை வழங்கக் கூடிய சிறப்பான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கான ஆலோசனை, பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் நலம் குறித்து விழிப்புணர்வுப் பெற வேண்டும். அரசு நடத்தும் இதுபோன்ற கட்டணமில்லா மருத்துவ முகாம்களில் தங்களது உடல்நலப் பரிசோதனை செய்து கொண்டு சுகாதாரமான நல்வாழ்வை பெற வேண்டும்'

    என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராய், செந்தில்நாதன், மாவட்ட விரிவாக்கக் கல்வியாளர் நாகேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai