Enable Javscript for better performance
என்ஜின் கோளாறு: மின்சார ரயில்கள் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டிக்குச் செல்லும் மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து விஜயவாடா நோக்கி சரக்கு ரயில் ஒன்று புதன்கிழமை இரவு 7மணிக்கு சென்று கொண்டிருந்தது.

    இந்த ரயில் பொன்னேரி ரயில் நிலையத்தைக் கடக்கும்போது அதன் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது.

    இதையடுத்து இந்த ரயிலில் இருந்த மற்றொரு என்ஜின் மூலம் 70 பெட்டிகள் பிரிக்கப்பட்டு முதல் நடைமேடையில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டன.

    இதன் காரணமாக கொல்கத்தா, மும்பை பகுதிகளுக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களும், கும்மிடிப்பூண்டிக்குச் செல்லும் மின்சார ரயில்களும் மாற்று தண்டவாளத்தில் தாமதமாக இயக்கப்பட்டன.

    இதே போல் சென்னை சென்ட்ரல் செல்லும் மின்சார ரயில்கள் 4-வது நடைமேடை வழியாக மாற்றி இயக்கப்பட்டன.

    இதையடுத்து சென்னையில் இருந்து வந்த ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் பழுதான என்ஜினை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai